எழுத்தாளர் திரு.பால் சுயம்பு எழுதிய 'இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய சாஷே புரட்சியின் தந்தை சின்னிகிருஷ்ணன்' என்கிற நூல் வாசிக்கக் கிடைத்தது.
திரு.சின்னிகிருஷ்ணன் அவர்களது வாழ்க்கையையும், அவரது பணியையும் சிறப்பித்துக் கூறுவதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மற்றவர்களுக்கு வழிகாட்டும் நூலாகவும் இந்நூலை எழுத்தாளர் திரு.பால் சுயம்பு அவர்கள் உருவாக்கித் தந்திருப்பது போற்றத்தக்கது.
வருங்கால தொழில்முனைவோருக்கான வழிகாட்டியாக விளங்கத் தகுந்ததாக உள்ள இந்நூலை பலரும் படித்து பயன்பெற எனது அன்பான
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ந.ரங்கசாமி
முதலமைச்சர்
புதுச்சேரி அரசு
திரு. பால் சுயம்பு அவர்களின் “இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய சாஷே புரட்சியின் தந்தை சின்னிகிருஷ்ணன்" என்ற புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. இந்திய பொருளாதாரத்தை மாற்றி அமைத்த மாபெரும் மேதையான சின்னிகிருஷ்ணன் அவர்களது வாழ்வை நெருங்கிப் பார்க்கும் அனுபவத்தை இந்த நூலை வாசிக்கும்போது பெற முடிந்தது.
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப தகுதியான காலத்தில் மாற்றுச் சிந்தனையோடு கூடிய முன்னெடுப்புகள் இந்தச் சமூகத்தை மாற்றும் திறன் வாய்ந்தது என்பதைச் சின்னிகிருஷ்ணன் வாழ்வை பார்க்கும்போது நம்மால் உணர முடிகின்றது.
வாழ்வில் வெற்றிபெறத்துடிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் ஊக்கம் தரும்
வாழ்வியல் நூலாக, சின்னிகிருஷ்ணன் அவர்களது வாழ்க்கை வரலாற்று நூலாக
இந்த நூல் அமைந்திருக்கின்றது. ஆகச்சிறந்த வாழ்வியல் அனுபவத்தைத்
தனது எழுத்தில் கொண்டு வந்த நூலாசிரியர் பால் சுயம்பு அவர்களது பணி மென்மேலும்
தொடர வாழ்த்துக்கள்.
Dr. G. VISWANATHAN
Founder & Chancellor
Former Member of Parliament
Former Minister, Govt. of Tamil Nadu
President, Education Promotion Society for India, New Delhi
"இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திய 'சாஷே'புரட்சியின் தந்தை சின்னிகிருஷ்ணன்" என்ற நெடுந்தலைப்பைக் கொண்ட இந்த நூல் வளரத்துடிக்கும் தொழில் முனைவோர்க்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது.
படிப்போர்க்குப் பேரார்வத்தையும், செயலாற்றலையும், மனவலிமையையும் தரக்கூடிய இந்தப் புத்தகம் ஓர் அழகிய குடும்பத்தின் வாழ்க்கைச் சரிதையாகவும் திகழ்கிறது.
குடும்பத்தின் தலைவன்- தலைவி சரியாக இருந்து தம்பதிகள் கருத்தொருமித்து வாழ்ந்து, பிள்ளைகள் வளர்ப்பும் நேர்த்தியாக இருந்தால் அது அக்குடும்பத்தினர்க்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் எவ்வளவு நன்மை நல்கும் என்பதை இந்நூல்வழி உணரலாம்.
இந்த நூல் முழுவதும் தொழிற் சிந்தனையை ஊக்கப்படுத்தும் பல்சுவைத் தகவல்கள் அற்புதம்.
வாசிப்பிற்கு இலகுவாக இயல்பான நடையில் செயற்கைப் புனைவின்றி எழுத்துவடிவம் தந்த பத்திரிகையாளர் திரு.பால் சுயம்பு பாராட்டுக்குரியவர்.
ஒரு படைப்பு என்பது சமூகத்திற்குப் பயன் தருவதாய் இருக்கவேண்டும். ஒரு தனி மனிதன் முயற்சி சமூகத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்.
வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் திரு.சின்னிகிருஷ்ணன் அவர்களின் கவனமும், சிந்தனையும், அக்கறையும் எளிய மக்கள் மீதே இருந்தன என்பதை நூலின் பல இடங்களில் உணரமுடிகிறது.
கவிப்பேரரசு வைரமுத்து
நூலாசிரியர், சின்னிகிருஷ்ணனை ஓர் அதிசயமாகக் காண்பதும்- கடனிலிருந்து சமூகம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைப் பற்றி எடுத்துரைப்பதும்- ஒரே நேரத்தில் 500 தொழில் முனைவோர்களை உருவாக்கி, 5000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பெற்றதையும் அற்புதச் சாதனைகளாக்கி விளக்கியது குறிப்பிடத்தக்க கட்டுரைகளாக மிளிர்கின்றன.
“தினத்தந்தி” பத்திரிகை (நாளேட்டின்) நிருபராகப் பரிணமித்த பண்பாளர் பால் சுயம்புவை நான் உளமாரப் பாராட்டுகிறேன் ! மேன்மேலும் அவர் வணிகத் தொடர்பான நூல்கள் பல படைக்க வேண்டுமென்பது எனது விழைவு, வேண்டுகோளுங்கூட!
டாக்டர் வி.ஜி.சந்தோசம்
தலைவர்: வி.ஜி.பி. குழுமம், சென்னை.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் பழைய நாட்கள், என் நினைவுகளில் பசுமையாக நிழலாடுகின்றன. நான் அப்போது கோத்ரெஜ் நிறுவனத்தின் சென்னை ஏரியா மேனேஜர். சுழன்றடித்து பணிசெய்துகொண்டிருந்த அந்த வாலிபப் பருவத்தில், பளபளப்பான வெல்வெட் சாஷே ஷாம்புவும் எங்கள் வினியோக சங்கிலிக்குள் வந்தது. அந்த நாட்களில் வெல்வெட் ஷாம்பு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்க்கப்பட்டது.
இந்தப் புத்தகம் தொழில்முனைவோர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டி. புதிதாகத் தொழில் தொடங்குவதற்குத் தேவைப்படும் மூலதனம் எது? என்ற கேள்விக்கு, “ஏழைகள் மீது பற்றுகொண்ட இதயமும், ஏழைகளுக்காகச் சிந்திக்கும் மூளையும், இந்த சமூகத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணமுமே மிக முக்கியமான மூலதனம்" என்று விளக்கங்களோடு, இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எங்களைப் போன்று சமூக அக்கறை கொண்ட தொழில்முனைவோர் அனைவருமே, அந்த உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.
எழுத்தாளர் பால் சுயம்பு அபூர்வ தகவல்களைச் சேகரித்து, இந்தப் புத்தகத்தை அற்புதமாகப் படைத்திருக்கிறார். சமூக அக்கறை கொண்டவர்களாக வாழ விரும்புகிறவர்களும், தொழில்முனைவோராகும் சிந்தனை கொண்டவர்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்!
ஏ.டி.பத்மசிங் ஐசக்
நிறுவனர்: ஆச்சி உணவுக் குழுமம், சென்னை.
கடலூரிலிருந்து இந்தியாவை ஆட்கொண்ட ஒரு வணிகக் குடும்பத் தின் பின்னணியை, சிந்தனையை, வெற்றியை, புரட்சியை, பங்களிப்பை பதிவு செய்யும் ஒரு நூலாக, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திய நூலாக இதனை நான் பார்க்கிறேன்.
இந்நூல் ஆசிரியர் பால் சுயம்பு அவர்கள் அபூர்வ தகவல்களைத் தொகுத்து நேர்த்தியாக இந்த நூலைக் கொண்டுவந்துள்ளார். இதை தொழில் சிந்தனை உள்ள இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது மிக அவசியம்.
வலைத்தமிழ். ச.பார்த்தசாரதி,
ஆசிரியர், வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
நிறுவனர்,www.TamilBusinessWorld.com
மேனாள் தலைவர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
My thanks and appreciation to my friend Paul Suyambu for presenting this book in a flow of words that's simple and gripping.I am sure this book will not disappoint you!
Dr.CK ASHOK KUMAR
Founder
First World Community
www.firstworldcommunity.org

கடலூரை சேர்ந்த சின்னிகிருஷ்ணன் அவர்கள் (1931-1979) சாஷே புரட்சியின் தந்தையாக போற்றப்படுகிறார். 'இந்திய பொருளாதாரத்தை உயர்த்திய சாஷே புரட்சியின் தந்தை சின்னிகிருஷ்ணன்' என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலை, எழுத்தாளர் பால் சுயம்பு எழுதியுள்ளார். 328 பக்கங்களை கொண்ட அந்த நூலை, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள ரிசர்ச் பார்க் ஆடிட்டோரியத்தில் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டு, பேசினார். அதில் அவரது மகன்கள் சி.கே.அசோக்குமார், சி.கே.ரங்கநாதன், சி.கே.குமாரவேல் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.