New Series...

திருநங்கைகள் உலகம், அதிசயங்கள்... அதிர்ச்சிகள்.. மர்மத்தொடர்..




நுழைவாசல்



- ஆண் உடல்

- பெண் உடல்

இரண்டும் மனிதர்களால் அறியப்பட்டவை. ஆணுக்குள் இருப்பது பெண்ணுக்கும், பெண்ணுக்குள் இருப்பது ஆணுக்கும் தெரிந்த விஷயம்தான்.

ஆனால்...

ஆதிகாலத்தில் இருந்தே நம்மில் தோன்றி, நம்மில் வாழ்ந்து, நம்மோடு மடிந்து கொண்டிருக்கும் இன்னொரு மனிதப் பிறவி நம்மால் அறியப்படாமல் இப்போதும் மர்மமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் திருநங்கைகள்.

சமூகத்தில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களை எல்லோரும் பார்க்கிறார்கள். பேசுகிறார்கள்... சிலர் பழகுகிறார்கள்...

பார்க்கும் அத்தனை பேர் மனத்திலும், பேசும் அத்தனை பேர் எண்ணங்களிலும் எழும் கேள்விகள் எக்கச்சக்கம்...!

இவர்கள் உடல் அமைப்பு எப்படி இருக்கும்?

இவர்களின் உணர்வுகளும், உணர்ச்சிகளும் எப்படி இருக்கும்?

குடும்பத்தினரோடு இவர்கள் உறவு நிலை எப்படி இருக்கிறது?

இவர்கள் படித்து, பல கலைகள் கற்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று என்னவெல்லாம் சாதித்திருக்கிறார்கள்?

இவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுவதுண்டா?

ஆண்களை திருமணம் செய்துகொண்டு இவர்கள் வாழும் வாழ்க்கை இனிக்குமா? கசக்குமா...?

இப்படி எல்லோருக்கும் உதித்த கேள்விகள் எனக்கும் உதித்தன. இத்தகைய கேள்விகள் அனைத்துக்கும் விடைதேடி, 'மனித சமூகத்தில் இவர்களை நோக்கி நிற்கும் மர்மத்தன்மைகள் அகல வேண்டும். இவர்களைவிட்டு சற்று ஒதுங்கி நிற்கும் சமூகம், 'வா என் சகோதரியே...!' என வரவேற்றுக் கொள்ள வேண்டும்' என விரும்பினேன்.

சமூகத்தின் அத்தனை கேள்விகளுக்கும் விடைதேட திருநங்கைகளை தொடர்புகொண்டேன். அவர்களில் பலதுறைகளில் இருப்பவர்களையும் தேடிப்பிடித்தேன். என் கேள்விகளுக்கு நான் பதிலை மட்டும்தான் கேட்டேன்.

ஆனால் அவர்களோ தங்கள் வாழ்க்கையையே பதிலாகத்தர தொடங்கினார்கள்.

திகில் தொடரும்..(10.3.2023-ல் ஆணாக பிறந்து.. பெண்ணாக மலர்ந்தது..)

இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/

Copyright © Paul Suyambu. All Rights Reserved.