
அம்மா வீட்டில் இல்லாத போதெல்லாம் அழகப்பனுக்கு கொண்டாட்டம். பிராவை அணிந்து கொண்டான். பாவாடையை உடுத்தி தாவணி போட்டு, முகத்துக்கு மஞ்சள் பூசிக்கொண்டான். ஓடிப்பார்த்தான். பெண்போல் ஆடிப்பார்த்தான். ஆகா இதெல்லாம் எவ்வளவு சுகம் என்றான். அதற்காக தினமும் அவன் மனது ஏங்கியது.
அதிகாலையில் அம்மா விழிப்பதற்கு முன்னால் விழித்தெழுந்து வாசலில் அழகழகாக கோலம் போட்டான். பக்கத்து பைப்பில் தண்ணீர் பிடித்து இடுப்பில் வைத்து தளுக்கி, தளுக்கி நடந்து பார்த்தான். பக்கத்து வீட்டு பையன் கண்ணாடி முன் நின்று மீசையை முறுக்குவதை ஒளித்திருந்து பார்த்தபோது தன் உடலுக்குள் ஏதேதோ ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்து தன்னை பெண் என்று நிரூபித்துக் கொண்டிருந்தான்.
ஆண் என்றது குடும்பம். பெண் என்றான் அவன். 'அடடே அந்த மாதிரி ஆளுப்பா இவன்' என்று கிண்டலடித்தது சமூகம். ஊரும், உறவும் அருவறுப்பாகப் பார்க்க. மனதும், உடலும் அவனை எங்கோ உந்தித்தள்ள, அவனைப் புரிந்த அவனைப் போன்ற ஒருவரின் பாசப் பார்வை அவன் மீது படர்கிறது. உட்கார்ந்து பேசினார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள்.
'வா நீ என்னைப் போன்றவன். நாம் திருநங்கை. இதல்ல நம் உலகம். இந்த உலகம் நம்மை ஏசும், பேசும், துரத்தும். நமக்காக இன்னொரு உலகம் காத்திருக்கிறது. அங்கே நீ வந்தால் நம் சொந்தங்கள் எல்லாம் உன்னை தூக்கி வைத்துக் கொண்டாடும். உனக்கொரு அம்மா கிடைப்பாள். அவள் உன்னை பெண்ணாக அங்கீகரிப்பாள். உன் உடலும் பெண்ணாக்கப்படும். நீ ஆடலாம். பாடலாம். இந்த மனிதர்களைவிட மிக சந்தோஷமாக வாழலாம்.' என்று திருநங்கைகளின் அதிசய உலகத்துக்கு அவனை அழைக்கிறார். விந்தையான அந்த உலகத்தை நோக்கி அழகப்பனும் புறப்படுகிறான்!
திகில் தொடரும்..(15.3.2023-ல் நாளை நடப்பது யாருக்கு தெரியும்..)
இத்தொடரை
யூட்யூபில் தொடர (YouTube): https://www.youtube.com/@paulsuyambu
இன்ஸ்டாகிராமில் தொடர (Instagram): https://www.instagram.com/paulsuyambuwriter/
பேஸ்புக்கில் தொடர (Facebook): https://www.facebook.com/paul.suyambu/
Copyright © Paul Suyambu. All Rights Reserved.