இந்த நிலையில் தனியார் அமைப்பு ஒன்று சமீபத்தில், பெண்களின் திருமண நிலைப்பாடுகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருக்கிறது. அதில் 21 முதல் 28 வயதுவரையுள்ள திருமணமாகாத பெண்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். அதில், படித்து நிறைய சம்பாதிக்கும் பெண்களில் 38 சதவீதத்தினர், ‘திருமணம் பெண்களின் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமானதல்ல’ என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். 8 சதவீதத்தினர் ‘பெண்கள் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. திருமணம் செய்துகொள்ளாமலும் வாழலாம்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
படித்த பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் இத்தகைய மனமாற்றம் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், ‘பெண்களில் ஒருசாரார் தங்கள் வாழ்க்கையில் திருமணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்ற சிந்தனையும் அவர்களிடம் இல்லை. அதனால் தான் திருமண முடிவை பெண்கள் வெகுகாலத்திற்கு தள்ளிப் போடுகிறார்கள். ஒருவகையில் பார்த்தால் கல்யாண ஆசைகள் பெண்களிடம் கரைந்து கொண்டிருப்பதாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறுகிறார்கள்.
நீங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும்போது, அதை உங்களுக்கான பிரச்சினையாக நினைத்தால் அது விஸ்வரூபம் எடுத்து,உங்களை பயமுறுத்தும். பயம் வந்துவிட்டால் யோசித்து முடிவெடுக்கும் நிதானத்தை இழந்துவிடுவீர்கள். அது பிரச்சினையின்வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அதனால், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை உங்கள் நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சினையாக கருதுங்கள். அப்போது தடுமாற்றமின்றி நிதானமாக சிந்திக்கும் பக்குவம் வரும். சொந்த பிரச்சினைக்கு பல நேரங்களில் தாமதமாக தீர்வு கிடைப்பதை, நமது அனுபவத்திலேயே பலதடவை பார்த்திருப்போம். ஆனால் அடுத்தவர்கள் பிரச்சினைக்கு நாம் அதிரடியாக உடனடி தீர்வு சொன்னதும் நமது வாழ்க்கையில் நடந்திருக்கும்.
அந்த ‘லாஜிக்கை’ இதில் பிரயோகித்து, உங்கள் பிரச்சினையை நண்பனின் பிரச்சினையாக நினைத்து நிதானமாக சிந்தித்தால், விரைவாக உங்களாலேயே உங்களுக்கான தீர்வை கண்டுபிடித்துவிட முடியும்.
நகரத்து பெண்களின் வாழ்வியல் நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிகாலையில் எழுந்து, குளித்து, பளிச்சென்று உடை உடுத்தி, காபி போட்டு எடுத்துக்கொண்டு படுக்கை அறைக்கு போய் கணவரை, மனைவி எழுப்பிய காட்சி எல்லாம் இப்போது கற்பனையாகிவிட்டது. கணவரின் கைகளை பற்றிக்கொண்டு, நகத்தை கடித்தபடி ஒன்றும் அறியாத அப்பாவிபோல் நடிக்கவும் இந்த காலத்து பெண்கள் விரும்புவதில்லை. தங்கள் பலத்தை நிலைநிறுத்திக்கொள்ளவும், எதிர்பார்ப்புகளை ஈடேற்றிக்கொள்ளவும் பெண்கள் விரும்புகிறார்கள். அதுதான் அவர்களது திருமணக்கொள்கையில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
‘ஆர்ப்பாட்டமான விழா மூலம் திருமண வாழ்க்கையில் இணைந்த பெண்கள் பலர், கூண்டுக்குள் சிக்கிய கிளிகள் போன்று திணறிக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரியும். பந்தத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் அவர்கள் தவித்துக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். சிலரோ அப்பாடா தப்பித்தோம் என்றபடி விவாகரத்து வாங்கிவிட்டு ஓடிவந்துவிட்ட கதையும் எங்களுக்கு தெரியும். இப்படி பலவீனமாக இருக்கும் திருமண பந்தத்திற்கு, லட்சங்களில் செலவு தேவையில்லை’என்று சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்கள், சம்பிரதாயங்களோடு எளியமுறையில் நடக்கும் திருமணத்தையே தாங்கள் விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
காதலையும் இந்த தலைமுறை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘காதல் முறிந்து போனால் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததெல்லாம் பழங்கதை. இப்போது காதல் தோல்வி அடைந்தாலும் அதை நினைத்து நாங்கள் துவண்டுபோய்விடுவதில்லை. காதல் தோற்றால், அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அதோடு அதை மறந்துவிடுவோம்’என்று 78 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். இது பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் வாழ்க்கையில் காதல் அனுபவமும் தேவை என்பது பெருவாரியான பெண்களின் கருத்தாக இருக்கிறது.
காதல் அனுபவமும் தேவை என்று கூறும் பெண்களிடம், ‘நீங்கள் காதலித்தவரை திருமணம் செய்ய, உங்கள் குடும்பத்தார் எதிர்த்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டபோது, ‘பெற்றோர் சொல்வதைத்தான் கேட்போம்’என்று 89 சதவீதம் பெண்கள் சர்வேயில் பதில் கூறியிருக்கிறார்கள். 9 சதவீத பெண்கள், ‘எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் காதலித்தவரை கைவிடமாட்டேன். இறுதி வரை காதலுக்காக போராடுவோம்’என்று கூறியிருக்கிறார்கள். 2 சதவீதம் பேர் ‘திருமணமே செய்துகொள்ள மாட்டோம். காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கும் வரை தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்போம்’என்று கூறியிருக்கிறார்கள்.
Copyright © Paul Suyambu. All Rights Reserved.