Articles

ஆயக்கலைகள் 64 என்னென்ன தெரியுமா?

ஆயக்கலைகள் 64 என்னென்ன தெரியுமா?

ஆயக்கலைகள் 64. அவற்றில் 10- வது கலையாக இருப்பது சமைத்தல். இதுதான் மனித வாழ்க்கைக்கே ஆதாரமான கலையாகும். தற்போது பெண்கள் அனைவருமே சமையல் கலையை கற்று ருசியாக சமைப்பதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

1. ஆடல்
2. இசைக்கருவி மீட்டல்
3. ஒப்பனை செய்தல்
4. சிற்பம் வடித்தல்
5. பூத்தொடுத்தல்
6. சூதாடல்
7. சுரதம் அறிதல்
8. தேனும், கள்ளும் சேகரித்தல்
9. நரம்பு மருத்துவம்
10. சமைத்தல்
11. கனி உற்பத்தி செய்தல்
12. கல்லும் பொன்னும் பிளத்தல்
13. கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14. உலோகங்களில் மூலிகை கலத்தல்
15. கலவை உலோகம் பிரித்தல்
16. உலோகக் கலவையை ஆராய்ந்து அறிதல்
17. உப்பு உண்டாக்குதல்
18. ஈட்டி எறிதல்
19. மற்போர் புரிதல்
20. அம்பு தொடுத்தல்
21. படை அணிவகுத்தல்
22. முப்படைகளை முறைப்படுத்தல்
23. தெய்வங்களை மகிழ்வித்தல்
24. தேரோட்டல்
25. மட்கலம் செய்தல்
26. மரக்கலம் செய்தல்
27. பொற்கலம் செய்தல்
28. வெள்ளிக்கலம் செய்தல்
29. ஓவியம் வரைதல்
30. நிலச்சமன் செய்தல்
31. காலக் கருவி செய்தல்
32. ஆடைக்கு நிறமூட்டல்
33. எந்திரம் தயாரித்தல்
34. தோணி கட்டுதல்
35. நூல் நூற்றல்
36. ஆடை நெய்தல்
37. சாணை பிடித்தல்
38. பொன்னின் மாற்று அறிதல்
39. செயற்கை பொன் செய்தல்
40. பொன்னாபரணம் செய்தல்
41. பொன் முலாமிடுதல்
42. தோல் பதனிடுதல்
43. மிருகத் தோல் உரித்தல்
44. பால் கறந்து நெய்யுருக்கல்
45. தையல்
46. நீச்சல்
47. இல்லம் தூய்மையாக்குதல்
48. துவைத்தல்
49. முடி திருத்தல்
50. எள்ளில், இறைச்சியில் நெய்யெடுத்தல்
51. உழுதல்
52. மரம் ஏறுதல்
53. பணிவிடை செய்தல்
54. மூங்கில் முடைதல்
55. பாத்திரம் வார்த்தல்
56. நீர் கொணர்தல், நீர் தெளித்தல்
57. இரும்பாயுதம் செய்தல்
58. மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல்
59. குழந்தை வளர்ப்பு
60. தவறினை தண்டித்தல்
61. பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
62. வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல்
63. மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64. வெளிப்படுத்தும் நிதானம்


Copyright © Paul Suyambu. All Rights Reserved.

Hit Counter